Select Your Transport

கீழே பல ட்ரான்ஸ்போர்ட் விவரங்கள் தந்திருக்கிறோம். பார்த்து விட்டு உங்களுக்கானதை ஃபார்மில் பூர்த்தி செய்யவும். இவை அல்லாத வேறு ட்ரான்ஸ்போர்ட் என்றால் அதன் பெயரும் ஈரோடு தொலைபேசி எண்ணும் ஃபார்மில் குறிப்பிட்டால் அதில் அனுப்பி விடுவோம்.

கீழ்காணும் படங்களைக் க்ளிக் செய்து பார்த்தால் பெரிதாகத் தெரியும். ட்ரான்ஸ்போர்ட் பற்றி மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.

1. ARC Parcel Service.
கிலோவுக்கு வாடகை 4 முதல் 5 ருபாய் வரை. அத்துடன் 100 ருபாய் ஃபிக்ஸட் சார்ஜ் வரும். டோர் டெலிவரி கேட்டால் கூடுதல் கட்டணத்தில் செய்து தருவார்கள்.



2. Rathi Meena Parcel Service

ஒரு பெட்டிக்கான கட்டணம் தூரத்தைப் பொறுத்து சுமார் 70 ருபாய் முதல் 100 ருபாய் வரை வரும்.


3. Mettur Super Service

ஒரு பெட்டிக்கான கட்டணம் 100 ருபாய் முதல் 150 ருபாய் வரை வரும். ஆனால் சீக்கிரமாக வந்து சேர்ந்து விடும். 



4. Parveen Travels

ஒரு பெட்டி என்றால்  சுமார் 150 ருபாய் கட்டணம் வரும். பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக ஆக கட்டணம் வெகுவாகக் குறைந்து விடும். 


5. Kannabiran

தென்மாவட்டங்களின் அனைத்து ஊர்களும் கவர் செய்கிறார்கள். ஆனால் லாரி ரசீது தருவதில் தாமதம் ஏற்படும். பெட்டி கட்டணம் சுமார் 150 - 200 க்குள் வரலாம்.

6. Prakash Transport

இவர்களும் தென்மாவட்டங்களை கவர் செய்கிறார்கள். மதுரை போய் வேறு வண்டியில் மாற்றி அனுப்புவார்கள். பெட்டி கட்டணம் 140 முதல் 200 வரை வரலாம். 


7. Vaigai Speed

பெட்டிக்கான கட்டணம் சுமார் 150 வரும். கேட்டுக் கொண்டால் டோர் டெலிவரி செய்வார்கள். இது பழைய லிஸ்ட், லிஸ்ட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் சர்வீஸ் இருக்கிறதா என்பது சந்தேகமே. சோ, கால் செய்து கேட்டு விட்டு உறுதிப்படுத்துங்கள். 

8. Sri Krishna Transport

இவர்கள் கோவை பக்கமாக கவர் செய்கிறார்கள். வாடகை சுமார் 100 வரலாம். இது போல நிறைய லோக்கல் ட்ரான்ஸ்போர்ட் இருக்கின்றன. உங்கள் ஊரில் ஈரோட்டில் இருந்து யார் வருகிறார்கள் என்று நீங்கள் விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்.


இது தவிர KPN, AKR போன்றவர்கள் லிக்விட் ஐட்டம் எடுப்பதில்லை. அதனால் அவற்றில் புக் செய்ய இயலாது.